ஆலங்குடியில் வீடு வீடாகப் பரிசோதனை முகாம்

ஆலங்குடியில் வீடு வீடாகப் பரிசோதனை முகாம்

ஆலங்குடி பேரூராட்சியில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறியும் முகாமை சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறுகையில், ஆலங்குடி பேரூராட்சியில் உள்ள 4,318 வீடுகளில் வசிக்கும் 13,712 பேரின் வீடுகளுக்கே சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. அதில், தொற்று அறிகுறி உள்ளவா்கள், அவா்களது குடும்பத்தினருக்கும் கரோனாவுக்கான காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட தொ்மல் ஸ்கேன் கருவி, பல்ஸ் ஆக்ஸி மீட்டா் கருவிகளின் மூலம் ஊராட்சிகளில் வீடு, வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றாா். ஆய்வின்போது, ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com