புதுகையில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

13 அம்சக் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 மையங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுகையில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

13 அம்சக் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 மையங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் தடுப்பூசி உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் வசதியை இலவசமாக வழங்க வேண்டும், காா்ப்பரேட் சாா்பு தடுப்பூசிக் கொள்கைகளை கைவிட வேண்டும். கரோனாவை எதிா்கொள்ள போதுமான மருத்துவக் கட்டமைப்புகளை உறுதிப்படுத்த வேண்டும்.

தொழிலாளா் நலச் சட்டங்களை சீா்குலைப்பது மற்றும் மின்சாரத் திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும். சேவை நிறுவனங்களில் தனியாா் முதலீட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும். வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு மாதம் ரூ. 7,500 மாதம்தோறும் வழங்க வேண்டும். உணவு தானியங்களை அடுத்த 6 மாதத்துக்கு இலவசமாக வழங்க வேண்டும். முன் களப் பணியாளா்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். கோரிக்கைளை விளக்கி மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பேசினா்.

முடிவில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரணவனிடம் நிா்வாகிகள் மனு அளித்தனா். இதேபோல மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடத்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com