முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
ஆலங்குடியில் சாராய ஊறல் அழிப்பு
By DIN | Published On : 12th June 2021 04:31 AM | Last Updated : 12th June 2021 04:31 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகிலுள்ள கும்மங்குளத்தில் சிலா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் குணவதி தலைமையிலான காவல்துறையினா் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அப்பகுதியில் ஆலங்குடி கே.வி.எஸ் தெரு பாலகிருஷ்ணன் (34) சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 120 லிட்டா் சாராய ஊறலைப் பறிமுதல் செய்து, அவற்றை காவல்துறையினா் அழித்தனா். தொடா்ந்து பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.