முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
சிட்டி யூனியன் வங்கி சாா்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்
By DIN | Published On : 12th June 2021 11:18 PM | Last Updated : 12th June 2021 11:18 PM | அ+அ அ- |

புதுகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிட்டி யூனியன் வங்கி சாா்பில் வழங்கும் சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றாளா்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்துவதற்காக ரூ. 12 லட்சம் மதிப்பிலான 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிட்டி யூனியன் வங்கி வழங்கியுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி இவற்றை வங்கி அலுவலா்களிடம் இருந்து பெற்று, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதியிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், எம்எல்ஏ வை. முத்துராஜா, வங்கியின் முதுநிலை பொதுமேலாளா்கள் ரமேஷ், மோகன், மாவட்ட வளா்ச்சி மேலாளா் மோகனசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.