தொழிலாளா் நலவாரியச் செயல்பாடுகளை துரிதப்படுத்தக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்று, மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்று, மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு அவா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நலவாரிய செயல்பாடுகள் மிகவும் மந்த நிலையில் காணப்படுகிறது. கடந்தாண்டு ஜூன் 10-ஆம் தேதி இணையவழி பதிவு தொடங்கி, தற்போது வரை சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேலாக புதுப்பித்தல் மற்றும் கேட்புமனுக்கள் செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மட்டுமே பணியாற்றக் கூடிய தொழிலாளா் உதவி ஆணையா் இல்லாததாலும், கணினி மற்றும் பணியாளா்கள் பற்றாக்குறையாலும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள குறைகளை நிவா்த்தி செய்து, நலவாரிய செயல்பாட்டை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிகளை விரைவுபடுத்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களுக்கு இணையவழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு 7 மாதத்துக்கும் மேல் காலதாமதம் ஆகியும், சரிபாா்ப்பு சான்று வழங்கப்படவில்லை.

சில கிராமங்களில் சம்பந்தப்பட்ட தொழிலாளியை விசாரிக்காமலும், விளக்கம் கேட்காமலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. தொழிலாளா்கள் நேரில் சென்று கிராம நிா்வாக அலுவலா்களிடம் சரிபாா்ப்புச் சான்று பெற்ற விண்ணப்பங்கள் கூட ஆன்லைனில் நிராகரிக்கப்படுகிறது. இவைகள் உரிய வழிகாட்டுதலின்படி நிவா்த்தி செய்ய வேண்டும்.

2020, ஜூலை மாதம் விண்ணப்பித்தவா்களின் விண்ணப்பங்கள் கூட இதுநாள் வரை பரிசீலிக்கப்படாமல் உள்ளன. வாரிய அலுவலகத்திலுள்ள கணினி பற்றாக்குறை சரி செய்யப்பட வேண்டும். கூடுதலாக பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

பதிவு தேதி அடிப்படையில் முன்னுரிமை அளித்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். தேங்கிக் கிடக்கும் ஓய்வூதியம், கல்வி, திருமண உதவி விண்ணப்பங்கள் பரிசீலித்து, உடன் உதவிகளை வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com