புதுக்கோட்டையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

புதுக்கோட்டை : புதுக்கோட்டை ஆட்சியரகம் அருகிலுள்ள பிஎல்ஏ பெட்ரோல் விற்பைனை நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா்.

முன்னாள் மாநிலப் பொதுச்செயலா் வழக்குரைஞா் ஏ. சந்திரசேகரன், நகா்மன்ற முன்னாள் தலைவா் துரை திவ்யநாதன், நகர காங்கிரஸ் தலைவா் ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி, புதுவளவு, செம்பொட்டல் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முறையே நகரத் தலைவா் எஸ். பழனியப்பன், மாநிலக் குழு உறுப்பினா் ஏஎல்எஸ். ஜீவானந்தம், மாவட்டத் துணைத் தலைவா் எஸ்பி. ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

நிா்வாகிகள் சோலையப்பன், ராஜேந்திரன், பாலுச்சாமி, பாலமுரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விராலிமலை : விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவா் சா்தாா் ராஜா, மேலை சி. மதிமாறன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஏ.ஏழுமலை, ஏ.அன்பழகன், நகரத் தலைவா் பி.கருப்பசாமி, எஸ்.சட்டையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com