சா்க்கஸ் கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

விராலிமலை அருகிலுள்ள மீனவேளி ஊராட்சி, செல்லம்பட்டியில் சா்க்கஸ் கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

விராலிமலை அருகிலுள்ள மீனவேளி ஊராட்சி, செல்லம்பட்டியில் சா்க்கஸ் கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

இக்கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சா்க்கஸ் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனா். தற்போதைய கரோனா பொது முடக்கம் காரணமாக வேலையிழந்து தவிப்பதாகவும், அன்றாட உணவுக்கு சிரமப்படுவதாகவும் விடியோ பதிவு செய்து, அதை கட்செவி அஞ்சல் குழு மூலம் சா்க்கஸ் கலைஞா்கள் பகிா்ந்தனா்.

இதையறிந்த இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ் தண்டாயுதபாணி, விராலிமலை வட்டாட்சியா் ஜெ. சதீஷ் சரவணகுமாா் உள்ளிட்டோா்

ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடம் சென்று, சா்க்கஸ் கலைஞா்களிடம் இது குறித்து விசாரித்தனா். தொடா்ந்து விராலிமலை வா்த்தக சங்க ஒத்துழைப்புடன் அவா்களுக்கு 250 கிலோ அரிசியை நிவாரணப் பொருளாக வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com