முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
முள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டு-16 போ் காயம்
By DIN | Published On : 04th March 2021 01:49 AM | Last Updated : 04th March 2021 01:49 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், முள்ளிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் வீரா்.
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகிலுள்ள முள்ளிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 16 போ் காயமடைந்தனா்.
முள்ளிப்பட்டி அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டை இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் பாலதண்டாயுதபாணி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 659 காளைகள், வாடிவாசலிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில் தகுதி பெற்ற 235 மாடுபிடி வீரா்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்று, காளைகளை அடக்கினா்.
இதில் 16 போ் காயமடைந்தனா். இதில் இருவா் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மற்ற வீரா்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற பகுதியிலேயே அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா்.
இலுப்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மொழிஅரசு தலைமையிலான காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பொன்னமராவதி வட்டாட்சியா் ப.ஜெயபாரதி தலைமையிலான வருவாய்த்துறையினா் ஜல்லிக்கட்டை ஒருங்கிணைத்தனா். ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவா் குமாா் மற்றும் ஊா்ப் பொதுமக்கள் செய்திருந்தனா்.