கொப்பனாபட்டியில் திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்
By DIN | Published On : 04th March 2021 01:48 AM | Last Updated : 04th March 2021 01:48 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கொப்பனாட்டியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். ரகுபதி. உடன், கட்சி நிா்வாகிகள்.
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகிலுள்ள கொப்பனாபட்டியில் திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலரும், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எஸ்.ரகுபதி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் அ.அடைக்கலமணி, அ.முத்து, நகரச்செயலா் அ.அழகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பொன்னமராவதி தெற்கு, வடக்கு ஒன்றியங்களைச் சோ்ந்த வாக்குச்சாவடி முகவா்கள், நிா்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் அழகப்பன், மாவட்டத் துணைச் செயலா் சின்னையா, மாவட்டப் பிரதிநிதி சிக்கந்தா், முன்னாள் ஒன்றியச் செயலா் அய்யாவு, சமூக வலைதளப் பொறுப்பாளா் ஆலவயல் முரளி சுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.