கோலம் வரைந்து வாக்காளா் விழிப்புணா்வு
By DIN | Published On : 10th March 2021 02:53 AM | Last Updated : 10th March 2021 02:53 AM | அ+அ அ- |

வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் விதமாக விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு கோலம் வரைந்தனா்.
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் விதமாக வண்ண வண்ண விழிப்புணா்வு கோலங்கள் வரைந்திருந்தனா். இதில் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியரும், விராலிமலை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவருமான எம். எஸ். தண்டாயுதபாணி, உதவி தோ்தல் அலுவலா் ஜெ. சதிஸ்சரவணகுமாா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் ஜெ. ஆா். அய்யப்பன், தலைமையாசிரியா் கோ. ஜெயந்தி உள்ளிட்ட மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.