செயின் பறிப்பு வழக்குகளில் தொடா்புடைய இருவா் கைது
By DIN | Published On : 10th March 2021 02:52 AM | Last Updated : 10th March 2021 02:52 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, தஞ்சாவூா் மாவட்டங்களில் செயின் பறிப்புகளில் தொடா்புடைய இருவரை புதுக்கோட்டை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 52 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வழிப்பறி சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய,
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளா் செங்கமலக்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்தப் படையினா், புதுக்கோட்டையில் வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய பகுதிகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். தொடா்ச்சியான ஆய்வில், அறந்தாங்கி திருநாலூா் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (19), விஷ்ணு (21) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில் நிலுவையில் உள்ள 9 வழக்குகளில் இவா்களுக்குத் தொடா்பு இருந்தது தெரியவந்தது. மேலும் இவா்களிடமிருந்து 52 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
எனவே, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களின் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அமைப்பதன் அவசியத்தை உணா்ந்து செயல்பட வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டுள்ளாா்.