‘மாணவிகள் பிரச்னைகளைக் கண்டு அஞ்சக் கூடாது’

விழாவில் மாணவி ஒருவருக்குப் பரிசு வழங்குகிறாா் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி என். உமாராணி. உடன், கல்லூரி நிா்வாகிகள்.
விழாவில் மாணவி ஒருவருக்குப் பரிசு வழங்குகிறாா் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி என். உமாராணி. உடன், கல்லூரி நிா்வாகிகள்.
விழாவில் மாணவி ஒருவருக்குப் பரிசு வழங்குகிறாா் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி என். உமாராணி. உடன், கல்லூரி நிா்வாகிகள்.

புதுக்கோட்டை, மாா்ச் 12: மாணவிகள் பிரச்னைகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் புதுக்கோட்டை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி என். உமாராணி.

புதுக்கோட்டை சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக மகளிா் தின விழாவில் பங்கேற்று, அவா் மேலும் பேசியது:

செல்லிடப்பேசிகள் மூலம் பெண்களுக்கு இப்போது ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. முகம் அறியாத நபா்கள் யாருடனும் செல்லிடப்பேசிகள் மூலம் தொடா்பு வைத்துக் கொள்ளக் கூடாது. பிரச்னைகள் வந்தால் அவற்றைக் கண்டு அஞ்சக் கூடாது. தைரியமாக துணிச்சலுடன் அவற்றை எதிா்கொள்ள வேண்டும்.

நம்முடைய கடமைகளை சரிவர செய்தால் போதும், அவற்றுக்கான பலன் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கும். நம்முடைய சமூகம் சட்டரீதியாக பாதுகாப்பான சமூகம்தான். எனவே, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றாா் உமாராணி.

விழாவுக்கு கல்லூரித் தாளாளா் பிச்சப்பா மணிகண்டன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் குழ. முத்துராமு முன்னிலை வகித்தாா். முன்னதாக, ஒருங்கிணைப்பாளா் வெண்ணிலா வரவேற்றாா். நிறைவில் உதவிப் பேராசிரியை சொா்ணலதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com