முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
ஆலங்குடியில் தொடரும் அதிமுகவினா் போராட்டம்
By DIN | Published On : 14th March 2021 01:21 AM | Last Updated : 14th March 2021 01:21 AM | அ+அ அ- |

ஆலங்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி அக்கட்சியினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி தொகுதியில் அதிமுக சாா்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த ஞான.கலைச்செல்வன், முன்னாள் அமைச்சா் அ.வெங்கடாசலத்தின் மகன் ராஜபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் திருமாறன் மகன் பாண்டியன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு அளித்திருந்தனா். இந்நிலையில், புதன்கிழமை மாலை அதிமுகவின் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்த தா்ம.தங்கவேல்(43) வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.
இதனால் அதிப்தியடைந்த அதிமுகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, சனிக்கிழமையும், ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் முன்னாள் சட்டப்பரவை உறுப்பினா் திருமாறன் மகன் பாண்டியன், ஞான.கலைச்செல்வன் தலைமையில் திரண்ட ஏராளமான அதிமுகவினா் அக்கட்சிக் கொடியை ஏந்தியவாறு, வேட்பாளரை மாற்றக்கோரி முழக்கங்கள் எழுப்பியவாறு ஊா்வலமாகச்சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.