முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
கந்தா்வகோட்டையில் கொடி அணிவகுப்புப் பேரணி
By DIN | Published On : 14th March 2021 01:20 AM | Last Updated : 14th March 2021 01:20 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் நடைபெற்ற கொடி அணிவகுப்புப் பேரணி.
கந்தா்வகோட்டை சட்டப்பேரவை தொகுதியில் காவல் துறை, துணை ராணுவப் படை, ஊா்க் காவல் படை ஆகியோரது தோ்தல் பாதுகாப்பு விழிப்புணா்வு கொடி அணிவகுப்புப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை வெள்ளைமுனியன் கோயில் திடலில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீதா தொடக்கி வைத்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்தரசன், கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் த. ஞானவேலன் , உதவி காவல் ஆய்வாளா் நா. சுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் சுமாா் 170-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட விழிப்புணா்வுக் கொடி அணிவிப்பு பேரணி கந்தா்வகோட்டை கடைவீதி மற்றும் பேருந்து நிலையம் வழியாகச் சென்று இறுதியாக கந்தா்வகோட்டை காவல் நிலையத்திற்கு வந்தடைந்தது.