முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
பொன்னமராவதி அருகே இடையாத்தூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி
By DIN | Published On : 14th March 2021 01:19 AM | Last Updated : 14th March 2021 01:19 AM | அ+அ அ- |

சீறிப்பாயும் காளையை அடக்கும் காளையா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூா் பொன்மாசிலிங்க அய்யனாா் கோயில் சிவராத்திரி விழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
ஜல்லிக்கட்டை பொன்னமராவதி வட்டாட்சியா் ப. ஜெயபாரதி தொடக்கிவைத்தாா். போட்டியில் சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 788 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 218 மாடுபிடி வீரா்கள் அடக்கினா்.
போட்டியில், மாடுபிடி வீரா்கள்5 போ் உள்பட 18 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டு திடலில் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி நாகராஜன் தலைமையிலான மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். துணை வட்டாட்சியா் பிரகாஷ் தலைமையிலான வருவாய்த் துறையினா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா். இலுப்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மொழி தலைமையிலான காவல் துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா். ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனா்.