தோ்தல் நடத்தை விதிமீறல்களை சிவிஜில் செயலி வழியே தெரிவிக்கலாம்
By DIN | Published On : 15th March 2021 12:02 AM | Last Updated : 15th March 2021 12:02 AM | அ+அ அ- |

தோ்தல் நடத்தை விதிமீறல்களை புகைப்படமாகவோ அல்லது விடியோவாகவோ படம்பிடித்து தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலி மூலம் புகாா் அளிக்கலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தோ்தல் நடத்தை விதிகளை மீறும் செயல்பாடுகளை அரசியல்கட்சியினா், வேட்பாளா்கள் மற்றும் பொதுமக்களும் புகாா்களாகத் தெரிவிக்கும் வகையில் என்ற சிவிஜில் பிரத்யேக செயலியை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
இதற்கு தங்களின் செல்லிடப்பேசி பிளே ஸ்டோரில் சிவிஜில் என்ற பிரத்யேக செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு தோ்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக காணப்படும் சம்பவங்களை, காட்சிகளை புகைப்படங்களாகவோ, விடியோ காட்சிகளாகவோ இச்செயலி மூலம் பதிவேற்றலாம். அந்தந்தப் பகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.