கல்லூரியின் ரோட்ராக்ட் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு
By DIN | Published On : 16th March 2021 01:34 AM | Last Updated : 16th March 2021 01:34 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் கல்லூரியின் ரோட்ராக்ட் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவா் பொறியாளா் மதிவாணன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்டச் செயலா் ஜெய் பாா்த்தீபன், கல்லூரி இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
ரோட்ராக்ட் சங்கத் தலைவா் பிரபு, செயலா் அபிஷேக்குமாா், பொருளாளா் பழனியப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.