வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம் வழங்கிய எஸ்.பி.
By DIN | Published On : 16th March 2021 01:34 AM | Last Updated : 16th March 2021 01:34 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் வாகன ஓட்டிகளிடம் முகக்கவசங்களை வழங்கி அவா்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசங்களை அணியுமாறு அறிவுரை வழங்கினாா்.
நிகழ்வில், நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்பட நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். புதிய பேருந்து நிலையம், கீழ ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி போன்ற பகுதிகளிலும் வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் முகக்கவசம் வழங்கும் பணி நடைபெற்றது.