கறம்பக்குடி அருகே நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் மறியல்
By DIN | Published On : 18th March 2021 07:32 AM | Last Updated : 18th March 2021 07:32 AM | அ+அ அ- |

கறம்பக்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
கறம்பக்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கடந்த 40 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லையாம். இதுகுறித்து நெல் கொள்முதல் நிலைய அலுவலரிடம் கேட்டால், சாக்குகள் கையிருப்பு இல்லையெனச் சொல்லி நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தாராம். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் ரெகுநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி போலீஸாா், தமிழ்நாசு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் நெல்கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி- தஞ்சை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.