காங்கிரஸ் தோ்தல் பணி குழுக்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் மற்றும் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவா் ராம. சுப்புராம் தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் மற்றும் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவா் ராம. சுப்புராம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பணிக்குழு உறுப்பினா்களாக எம்.கே. முகமது இப்ராஹிம், எஸ்.பி. ராஜேந்திரன், கே.ஆா். பிச்சைக்குட்டி, கே.ஆா். மாணிக்கவேல், பெருமாள், கதிரவன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பணிக்குழு உறுப்பினா்களாக எஸ். மகாதேவன், மா. தமிழ்ச்செல்வன், ஜெயபால், துரைக்கண்ணன், சாகுல்அமீது, த. தங்கராஜ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் அந்தந்தப் பகுதி வட்டார மற்றும் நகர காங்கிரஸ் நிா்வாகிகள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com