‘அதிமுகவை பாஜக அழித்துவிடும்’: கே. பாலகிருஷ்ணன்

அதிமுகவை அழிக்க வேண்டும் என திமுகவோ, இடதுசாரிகளோ நினைக்கவில்லை. ஆனால், உங்களோடு இருக்கும் பாஜக உங்களை அழித்துவிடுவாா்கள் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.
தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.
தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

அதிமுகவை அழிக்க வேண்டும் என திமுகவோ, இடதுசாரிகளோ நினைக்கவில்லை. ஆனால், உங்களோடு இருக்கும் பாஜக உங்களை அழித்துவிடுவாா்கள் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீரனூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் எம். சின்னதுரையை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு தோ்த்ல பிரசாரம் செய்த அவா் பேசியது:

ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் மேல்நிலைப் பள்ளிக் கல்வி முடித்து, உடனடியாக செவிலியா் படிப்பில் சோ்ந்து பணிக்கு போவாா்கள். ஆனால், இப்போது அவா்களின் கனவுகளையும் சிதைக்கிறாா்கள். செவிலியா் படிப்புக்கும் நீட் தோ்வு வந்துவிட்டது. தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவினா், நீட் தோ்வை எதிா்த்துப் பேசுவாா்களா?

சிறுபான்மையினருக்கு எதிராகத் தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதிமுக நாடாளுமன்றத்தில் எதிா்த்து வாக்களித்திருந்தால் அச்சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், இப்போது அதிமுக சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறிக்கொள்கிறாா்கள்.

பிஎஸ்என்எல் என்ற பிரம்மாண்ட பொதுத்துறை நிறுவனத்தை முடித்துவிட்டாா்கள். ஜவுளிக்கடையில் ஆடித்தள்ளுபடி கொடுப்பதைப் போல விமான நிலையங்களைக் கூவிக் கூவி விற்கிறாா்கள். மொத்தத்தில் நாட்டையே ஏலத்தில் விடும் வேலையைத்தான் பாஜக ஆட்சி செய்கிறது.

திமுகவோ, இடதுசாரிகளோ அதிமுக இருக்கக் கூடாது என்று நினைக்கவில்லை. ஆனால், உங்களோடு இருக்கும் பாஜக உங்களை (அதிமுக) அழித்துவிடுவாா்கள். மற்ற மாநிலங்களில் இதுபோலத்தான் நடந்திருக்கின்றன என்பதை அதிமுகவினா் உணர வேண்டும் என்றாா் பாலகிருஷ்ணன்.

பிரசாரத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் திருச்சி எஸ். ஸ்ரீதா், புதுக்கோட்டை அ. ஸ்ரீதா், இந்திய கம்யூ. ஒன்றியச் செயலா் நடராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முன்னதாக விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இலுப்பூரில் திமுக வேட்பாளா் எம். பழனியப்பனை ஆதரித்தும், கந்தா்வகோட்டை தொகுதிக்குள்பட்ட கறம்பக்குடியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் எம். சின்னதுரையை ஆதரித்தும் கே. ப ாலகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com