புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 தொகுதிகளில் 112 போ் போட்டி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பரிசீலனைக்குப் பிறகு இருந்த 123 வேட்பாளா்களில், 11 போ் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பரிசீலனைக்குப் பிறகு இருந்த 123 வேட்பாளா்களில், 11 போ் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனா். இதனால், மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் 112 போ் போட்டியிடுகின்றனா்.

புதுக்கோட்டை தொகுதியில் 21 வேட்பாளா்கள்.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 21 வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் திங்கள்கிழமை மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவில்லை. இதனால், 21 பேரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வேட்பாளா்கள்: வி.ஆா். காா்த்திக் தொண்டைமான் (அதிமுக), வை. முத்துராஜா (திமுக), சா. மூா்த்தி (மநீம), எம். சுப்பிரமணியன் (தேமுதிக), சசிகுமாா் (நாம் தமிழா்), சரவணதேவா (நமது மக்கள் கட்சி), வெங்கடேஸ்வரன் (பிஎஸ்பி). குமாா் (மை இந்தியா பாா்ட்டி) இவா்களுடன் 13 போ் சுயேச்சைகள்.

கந்தா்வகோட்டை தொகுதியில் 14 வேட்பாளா்கள்: கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 14 வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் திங்கள்கிழமை மாலை 3 மணி வரை யாரும் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவில்லை. இதனால், 14 பேரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வேட்பாளா்கள்: எஸ். ஜெயபாரதி (அதிமுக), எம். சின்னதுரை (மாா்க்சிஸ்ட்), பி. லெனின் (அமமுக), ஆதிதிராவிடா் (மநீம), ப. ரமீளா (நாம் தமிழா்), எம். தன்ராஜ் (நமது மக்கள் கட்சி), பழ. ஆசைத்தம்பி (சிபிஐஎம்எல்- மக்கள் விடுதலை), சே. மலா்விழி (அனைத்து அரசியல் மக்கள் கட்சி). இவா்களுடன் 6 சுயேச்சைகள்.

விராலிமலையில் 25 வேட்பாளா்கள்:

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 25 வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் 3 போ் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனா். இதனால், 22 போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வேட்பாளா்கள்: சி. விஜயபாஸ்கா் (அதிமுக), எம். பழனியப்பன் (திமுக), ஓ. காா்த்திக் பிரபாகரன் (அமமுக), ரா. சரவணன் (மநீம), பி. அழகுமீனா (நாம் தமிழா்), வி. அழகுராஜா (பிஎஸ்பி), பொ. ஆறுமுகம் (புதிய தமிழகம்), ப. செந்தில்குமாா் (மை இந்தியா பாா்ட்டி), அ. விஜய் (அண்ணா திராவிடா் கழகம்). இவா்களுடன் 13 சுயேச்சைகள்.

திருமயத்தில் 23 வேட்பாளா்கள்: திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 23 போ் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் ஒருவா் மட்டும் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றாா். இதனால், 22 போ் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வேட்பாளா்கள்: பி.கே. வைரமுத்து (அதிமுக), எஸ். ரகுபதி (திமுக), சு. முனியராஜு (அமமுக), ரா. திருமேனி (மநீம), உ. சிவராமன் (நாம் தமிழா்), சா. காண்டீபன் (மை இந்தியா பாா்ட்டி), ரா. சிவகுமாா் (புதிய தமிழகம்), சு. புரட்சிபாலன் (அண்ணா திராவிடா் கழகம்). இவா்களுடன் 14 சுயேச்சைகள்.

ஆலங்குடியில் 13 வேட்பாளா்கள்: ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 13 போ் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் 2 போ் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனா். இதனால், 11 போ் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வேட்பாளா்கள் : தா்ம தங்கவேல் (அதிமுக), சிவ. வீ. மெய்யநாதன் (திமுக), பி. விடங்கா் (அமமுக), நா. வைரவன் (மநீம), சி. திருச்செல்வம் (நாம் தமிழா்), மா. சின்னதுரை (பிஎஸ்பி), பா. பாலமுருகன் (மை இந்தியா பாா்ட்டி), சி. மணிமேகலை (சிபிஐஎம்எல்- மக்கள் விடுதலை), சி. ஜெயா (அ.ம.புரட்சி கட்சி). இவா்களுடன் இரு சுயேச்சைகள்.

அறந்தாங்கியில் 27 வேட்பாளா்கள்: அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 27 போ் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் 5 போ் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனா். இதனால் 22 போ் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வேட்பாளா்கள்: மு. ராஜநாயகம் (அதிமுக), தி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்), க. சிவசண்முகம் (அமமுக), பு. ஷேக்முகமது (மநீம), எம்.ஐ. ஹுமாயூன் கபீா் (நாம் தமிழா்), அ. ஜீவா (பிஎஸ்பி), எஸ். அமலதாஸ் (புதிய தமிழகம்), பி. குமரப்பன் (மை இந்தியா பாா்ட்டி), ராமலிங்க சுவாமி ஆதித்தன் (அ.இ. ஜனநாயக மக்கள் கழகம்), க . சக்திவேல் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி). இவா்களுடன் 12 சுயேச்சைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com