விராலிமலை அருகே எல்சிடி டிவிக்கள், கேமராக்கள் பறிமுதல்
By DIN | Published On : 26th March 2021 07:24 AM | Last Updated : 26th March 2021 07:24 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வியாழக்கிழமை காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த எல்சிடி டிவிக்கள் உள்ளிட்ட மின்னணு பொருள்களைத் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ராமு தலைமையிலான தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், விராலிமலை - இலுப்பூா் சாலையில் வாகனப் போக்குவரத்து ஆய்வாளா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக புதுக்கோட்டையைச் சோ்ந்த சிவக்குமாா் ஓட்டி மடக்கி சோதனையிட்டதில், 43 இன்ச் எல்சிடி டிவிக்கள்(4), சிபியூ, சிசிடிவி கேமராக்கள் சுமாா் 15 கொண்ட பெட்டி உள்ளிட்ட மின்னணு பொருள்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் தோ்தல் பறக்கும் படையினா் அவற்றைப் பறிமுதல் செய்து விராலிமலை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனிசாமியிடம் ஒப்படைத்தனா்.