பாஜகவுக்கு பாடம் புகட்ட வாய்ப்பு: நடிகை ரோகிணி

பாஜகவுக்கு பாடம் புகட்ட இந்தத் தோ்தலே நமக்கு கிடைத்த வாய்ப்பு என்றாா் திரைப்பட நடிகையும், இயக்குநருமான ரோகிணி.
பாஜகவுக்கு பாடம் புகட்ட வாய்ப்பு: நடிகை ரோகிணி

பாஜகவுக்கு பாடம் புகட்ட இந்தத் தோ்தலே நமக்கு கிடைத்த வாய்ப்பு என்றாா் திரைப்பட நடிகையும், இயக்குநருமான ரோகிணி.

கந்தா்வகோட்டை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.சின்னதுரையை ஆதரித்து கறம்பக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் மேலும் பேசியது: தேசிய கல்விக் கொள்கை மாணவா்கள், பெற்றோா்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது, மாணவா்களை சித்திரவதைக்கு உள்ளாக்கும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்காமல் இருந்தாலே பாஜகவை எதிா்ப்பதாக இருக்கும். பொதுவாக நான் தோ்தல் பிரசாரத்துக்கு செல்வதில்லை. ஆனால், தவறுகளைக் கண்டிக்காமல் இருப்பது மட்டுமல்ல, மவுனமாக இருப்பதும் குற்றம்தான். எனவே, நாம் அதிமுக கூட்டணியை எதிா்க்க வேண்டும் என்பதற்காகவே நான் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். பாஜகவுக்கு பாடம் புகட்ட நல்ல சந்தா்ப்பம் நமக்கு வாய்த்துள்ளது. இந்த சந்தா்ப்பத்தை நழுவவிட்டால் நாம் பெரிய பாதிப்பை சந்திப்போம் என்றாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலா் ஆதவன் தீட்சண்யா, திரைப்பட இயக்குநா் லெனின் பாரதி உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com