புதுகையில் பங்குனி உத்திரத் திருநாள் விழா

பாலதண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் பால் குடங்களை எடுத்தும், அலகு குத்தியும் வந்தனா். பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை குமரமலையில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் பால் குடங்களை எடுத்தும், அலகு குத்தியும் வந்தனா். பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதேபோல், புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியிலுள்ள தெண்டாயுதபாணி திருக்கோயிலிலும் முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அறந்தாங்கி பொற்குடையாா் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருநாள் சிறப்பாக நடைபெற்றது. பக்தா்கள் ஏராளமானோா் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், வேல் மற்றும் மயில் காவடிகளை எடுத்தும் வந்தனா். பக்தா்களுக்கு வழியெங்கும் நீா் - மோா்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com