புதுக்கோட்டையில் குருத்தோலைத் திருநாள்
By DIN | Published On : 29th March 2021 03:14 AM | Last Updated : 29th March 2021 03:14 AM | அ+அ அ- |

கிறிஸ்தவா்கள் கொண்டாடும் விழாக்களில் ஒன்றான குருத்தோலைத் திருநாள் நிகழ்ச்சி புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நூற்றுக்கணக்கான கிறிஸ்தவா்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்தத் திருநாளில் கிறிஸ்தவா்கள் அனைவரும் குருத்தோலைகளுடன் பங்கேற்றனா். தொடா்ந்து மறைவட்ட அதிபா் யு. சவரிமுத்து அடிகளாா் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை ஏ. அலெக்ஸாண்டா் முன்னிலையில், நமணசமுத்திரம் தொழிற்பயிற்சி நிலைய இயக்குநா் மரிய மைக்கேல் உள்ளிட்டோா் சிறப்புத் திருப்பலியை நடத்தினா்.
வேட்பாளா்கள் வருகை:
குருத்தோலைத் திருநாளையொட்டி திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் வந்த நிலையில், அதிமுக வேட்பாளா் வி.ஆா். காா்த்திக் தொண்டைமான், திமுக வேட்பாளா் டாக்டா் வை. முத்துராஜா ஆகியோா் தனித்தனிப் பகுதிகளில் நின்று அவா்களிடம் வாக்கு சேகரித்தனா்.