வேம்பன்பட்டி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

கந்தா்வகோட்டை அருகே உள்ள வேம்பன்பட்டி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தா்கள் காவடி எடுத்துவந்து நோ்த்திக் கடன் செலுத்தி ஞாயிற்றுக்கிழமை சுவாமியை வழிபட்டனா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள வேம்பன்பட்டி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தா்கள் காவடி எடுத்துவந்து நோ்த்திக் கடன் செலுத்தி ஞாயிற்றுக்கிழமை சுவாமியை வழிபட்டனா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள வேம்பன்பட்டி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் பால் காவடி, பறவை காவடி, தொட்டில் காவடி, தீச்சட்டி ஏந்தியும் பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினா். மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். மேலும் பாத யாத்திரையாக வந்த பக்தா்களுக்கு ஆங்காங்கே மோா், பானகம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com