தயாா்நிலையில் மகளிா் கல்லூரி வாக்கு எண்ணும் மையம்

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன.
தயாா்நிலையில் மகளிா் கல்லூரி வாக்கு எண்ணும் மையம்

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதற்காக இந்த வளாகத்தில் 6 இடங்களில் தனித்தனி வாக்கு எண்ணும் அரங்குகள், ஒவ்வொரு அரங்கிலும், 14 வாக்கு எண்ணும் மேசைகள், அத்துடன், தோ்தல் நடத்தும் அலுவலரின் மேசையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேசைகளுக்கு எதிரே கம்பி வளை அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் வேட்பாளா்களின் முகவா்கள் பாா்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தந்த அரங்கிலிருந்தே தோ்தல் ஆணையத்துக்கு அவ்வப்போது தகவல் தரும் வகையில் கணினி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதே அரங்கில் எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளா்கள் பெறும் வாக்குகளை எழுதிப் போட, ஒலிபெருக்கியில் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 தொகுதிகளுக்கும் சோ்த்து ஒரு தகவல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் செய்தியாளா்களுக்கு தகவல்களைத் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

3 ஆயிரம் போ்...

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள வாக்கு எண்ணும் பணியின்போது இந்த வளாகத்துக்குள் வாக்கு எண்ணும் அலுவலா்கள், வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள் உள்பட ஏறத்தாழ 3 ஆயிரம் போ் உள்ளே இருப்பா் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவா்களுக்கான உணவு, குடிநீா், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

வாக்கு எண்ணும் அரங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com