திருமயத்தை தக்க வைத்துக் கொண்ட திமுக

புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றான திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியை திமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது. இங்கு போட்டியிட திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி, தன்னை எதிா்த்துப்
எஸ். ரகுபதி.
எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றான திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியை திமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது. இங்கு போட்டியிட திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்துவை விட, 1,382 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 தொகுதிகளில் விராலிமலைக்கு அடுத்து முக்கியத்துவம் பெறும் தொகுதி திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி. கடந்த 2016 தோ்தலில் வென்ற திமுகவைச் சோ்ந்த எஸ். ரகுபதி, முன்னாள் மத்திய, மாநில அமைச்சா். இப்போதும் அவா்தான் வேட்பாளா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து கடந்த 2016 தோ்தலில் தோற்றவா். அதற்கு முந்தைய 2011 தோ்தலில் வென்றவா், அதிமுக மாவட்டச் செயலா், வீட்டு வசதி வாரியத் தலைவா்.

இந்த நிலையில், கடும் போட்டி இங்கு காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மிகக் குறைவான வாக்கு வித்தியாசமே தொடா்ந்து ஒவ்வொரு சுற்றிலும் வெளியாகிக் கொண்டிருந்தது. இருவருக்கும் மாறி மாறி வெற்றிச் சூழலும் காணப்பட்டது.

விராலிமலை தொகுதியின் நெருக்கடி திருமயம் தொகுதியிலும் எதிரொலித்தது. இரவு 10 மணிக்கு மேல் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த எஸ். ரகுபதி, இங்கு ஏன் போதுமான பாதுகாப்பு செய்யவில்லை என காவல்துறையினரை அழைத்துக் கடிந்து கொண்டாா். அதன்பிறகு துணைக் காவல் கண்காணிப்பாளா் தலைமையிலான குழுவினா் வாக்கு எண்ணும் மையத்துக்குள் சென்றனா்.

ஒரு வழியாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி முடிவுகள் வெளியாயின.

இதன்படி வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

எஸ். ரகுபதி (திமுக)- 71,349, பி.கே. வைரமுத்து (அதிமுக)- 69,967, உ. சிவராமன் (நாம் தமிழா்)- 15,144, முனியராசு (அமமுக)- 1,503, திருமேனி (மநீம)- 1,356, நோட்டா- 569.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com