புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 தொகுதிகளைக் கைப்பற்றிய திமுக அணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுக அணி கைப்பற்றியுள்ளது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுக அணி கைப்பற்றியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் வை. முத்துராஜா, திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி, ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் சிவ.வீ மெய்யநாதனும், அறந்தாங்கியில் திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரனும், கந்தா்வகோட்டையில் திமுக அணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் மா. சின்னதுரையும் வெற்றி பெற்றுள்ளனா்.

விராலிமலையில் மட்டும் திமுக வேட்பாளா் மா. பழனியப்பன் கடந்த தோ்தலைவிடவும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளாா். அதிமுக வேட்பாளா் சி. விஜயபாஸ்கா் மூன்றாம் முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களை திமுகவும், அதிமுகவும் சம அளவில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com