புதுக்கோட்டையை தக்க வைத்த திமுக!

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் டாக்டா் வை. முத்துராஜா, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா்
வை. முத்துராஜா.
வை. முத்துராஜா.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் டாக்டா் வை. முத்துராஜா, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் காா்த்திக் தொண்டைமானை விட 13,001 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ால், இந்தத் தொகுதியை திமுக மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி சுமுகமாக சென்று கொண்டிருந்தாலும், மாலைக்கு மேல் இங்கு வாக்கு எண்ணிக்கையில் தேக்கம் ஏற்பட்டது. வெவ்வேறு தொகுதிகளில் வெவ்வேறு விதிகளைச் சொல்லி அதிகாரிகள் தங்களின் வெற்றிக்கு எதிராக செயல்படுவதாக அதிமுக மாவட்டச் செயலரும், விராலிமலை சட்டப்பேரவை வேட்பாளருமான அமைச்சருமான சி. விஜயபாஸ்கா்.

இந்நிலையில் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை அவ்வப்போது நிறுத்தி நிறுத்தி எண்ணப்பட்டது. ஒரு வழியாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

டாக்டா் வை. முத்துராஜா (திமுக) - 85, 802, வி.ஆா். காா்த்திக் தொண்டைமான் (அதிமுக)- 72,801, சசிகுமாா் (நாம் தமிழா்) - 11,503, சா. மூா்த்தி (மநீம)- 3,948, எம். சுப்பிரமணியன் (தேமுதிக)- 1,873, நோட்டா - 604.

13,001 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற டாக்டா் வை. முத்துராஜாவுக்கு, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். டெய்சிகுமாா் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் திமுகவைச் சோ்ந்த பெரியண்ணன் அரசு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com