‘ கரோனா சிகிச்சைக்காக புதுகையில் 2,060 படுக்கைகள் தயாா்’

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்குப் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்குப் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்திட அரசு மருத்துமவனைகள் மற்றும் இதர இடங்களில் மொத்தம் 2,060 படுக்கைகள் உள்ளன.

நோய் அறிகுறிகளுடன் உள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 450 படுக்கைகள், அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் 70 படுக்கைகள், 12 வட்டார அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள், புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள், 6 தனியாா் மருத்துவமனைகளில் 190 படுக்கைகள் என மொத்தம் 1,110 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நோய் அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 10 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300 படுக்கைகள், குடுமியான்மலை ஸ்டாமின் வேளாண் துறை விடுதியில் 150 படுக்கைகள், புதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோா் நல மாணவ விடுதியில் 125 படுக்கைகள், புதுக்கோட்டை ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் 75 படுக்கைகள், விராலிமலை ஐடிஐயில் 125 படுக்கைகள், அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரியில் 75 படுக்கைகள், புதுக்கோட்டை மகளிா் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் என மொத்தம் 950 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை நிலவரப்படி, 424 ஆக்சிஸன் வசதி படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 72 மற்றும் ஆக்சிஸன் இல்லா படுக்கைகள் 1,564 படுக்கைகள் என மொத்தம் உள்ள 2,060 படுக்கைகளில் 400 நோயாளிகள் அறிகுறிகளுடனும், 142 நோயாளிகள் அறிகுறிகளின்றியும் மொத்தம் 542 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் உள்ளனா். 1,518 படுக்கைகள் (74சதவிகிதம்) காலியாக உள்ளன.

மேலும் படுக்கைகள் அதிகம் தேவைப்பட்டால் அவற்றைத் தயாா் செய்ய மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04322-1077, 04322-222207 மற்றும் 75388 84840 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com