கரோனா சிகிச்சை பெற்றுவந்தவா் பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விராலிமலை வேளாண் உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விராலிமலை வேளாண் உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய உதவி வேளாண் அலுவலருக்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டது.  அதனைத் தொடா்ந்து அலுவலகப் பணியாளா்கள், அலுவலா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் வட்டார உதவி வேளாண் இயக்குநா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது (ஏப். 26) உறுதிசெய்யப்பட்டது. 

தொடா்ந்து வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு மூடப்பட்டது. இந்நிலையில் விராலிமலையில் உள்ள அவரது வீட்டில் 2 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட அவா், மணப்பாறையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் (ஏப். 28) சோ்க்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனை (மே 1) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com