‘புதுகை மாவட்டத்தில் 4.65 லட்சம் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதி’

தமிழ்நாடு முதல்வா் அறிவித்த கரோனா பொது முடக்கக் கால நிவாரண உதவித்தொகையின் முதல் தவணை ரூ. 2 ஆயிரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4.65 லட்சம் குடும்பங்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வ

புதுக்கோட்டை: தமிழ்நாடு முதல்வா் அறிவித்த கரோனா பொது முடக்கக் கால நிவாரண உதவித்தொகையின் முதல் தவணை ரூ. 2 ஆயிரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4.65 லட்சம் குடும்பங்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையில் பொதுவிநியோகத் திட்ட அரிசி பெறும், மின்னணு குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை முதல் தவணையாக மே 15 ஆம் தேதி முதல் அந்தந்த நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும், புழக்கத்தில் உள்ள அரிசி பெறும் 4,65,947 மின்னணு குடும்ப அட்டைதாரா்களுக்கு (இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உள்பட) இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது.

நாளொன்றுக்கு 200 குடும்பங்களுக்கு மிகாமல் முன்கூட்டியே வீட்டுக்கே சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும். அந்த டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துக்கு சென்று நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

டோக்கன் விநியோகம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறும். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிநபா் இடைவெளியைக் கடைபிடித்து நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் புகாா் இருப்பின் பொதுமக்கள் புகாா் தெரிவிக்க வேண்டிய எண்கள்:

புதுக்கோட்டை- 94450 00312, ஆலங்குடி- 94450 00313, குளத்தூா்- 94450 00314, கந்தா்வகோட்டை- 94450 00315, திருமயம்- 94450 00316, அறந்தாங்கி- 94450 00317, ஆவுடையாா்கோவில்- 94450 00318, மணமேல்குடி- 94438 70034, பொன்னமாரவதி- 94450 00404, கறம்பக்குடி- 94450 00405, இலுப்பூா்- 94450 00319, விராலிமலை- 90804 87553 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com