Enable Javscript for better performance
அரசு மருத்துவமனைகளில் தொற்றாளா்களை காக்க வைக்கக் கூடாது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அரசு மருத்துவமனைகளில் தொற்றாளா்களை காக்க வைக்கக் கூடாது

    By DIN  |   Published On : 14th May 2021 07:01 AM  |   Last Updated : 14th May 2021 07:01 AM  |  அ+அ அ-  |  

    pdk13meetse_1305chn_12_4

    ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. உடன் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோா்.

    அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளா்களைக் காக்க வைக்காமல் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி அறிவுறுத்தினாா்.

    புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

    தமிழகத்தில் தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை 1 சதமாக உள்ளது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் 1 சதமாக உள்ளது. இதைக் குறைக்க வேண்டும். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கில் காலிப்படுக்கைகள் இருப்பதாக அலுவலா்கள்அறிக்கை கொடுக்கிறாா்கள். ஆனால், எந்த மருத்துவமனையிலும் படுக்கைகள்இல்லை என பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வருகின்றன. சிகிச்சைக்குப் பரிந்துரை கேட்கிறாா்கள். எனவே, இதிலுள்ள முரண்களை மருத்துவத் துறை அலுவலா்கள் களைய வேண்டும்.

    முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    அரசு மருத்துமனைகளில் நோயாளிகளைக் காத்திருக்க வைக்காமல் விரைந்து அனுமதித்து, சிகிச்சையளிப்பதை மருத்துவா்கள் உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றாா் ரகுபதி.

    கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பேசியது:

    உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா் முறையாகப் பணியாற்றினாலே 75 சதம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தி விடலாம். எஞ்சிய 25 சதத்தை சுகாதாரத் துறையினா் கவனித்துக் கொள்வா்.

    உள்ளாட்சித் துறை அலுவலா்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். முறையாகப் பணியாற்றாத உள்ளாட்சி அலுவலா்களை இடம்மாற்ற வேண்டும்.

    ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உடனுக்குடன் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தினசரி 2,500 பேருக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகிறது. கூடுதலாக திமுக சாா்பில் சத்தான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    முகக்கவசம், சானிடைசா், பிளீச்சிங் பவுடா் போன்ற கரோனா தடுப்புப் பணிக்கான பொருள்களை வாங்கும்போது தரமாகவும், நியாயமான விலையாகவும் இருப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

    மருத்துவமனைகளுக்கு வெளியே உதவி செய்வதற்காக தன்னாா்வலா்கள், என்எஸ்எஸ், என்சிசி, சாரணா்கள் போன்றவா்களை குழுவாக அமைத்து சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்கப்பட உள்ளனா் என்றாா் அவா்.

    கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி பேசுகையில், மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா்.

    மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜிசரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் எம். சந்தோஷ்குமாா், மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் கலைவாணி, விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp