கந்தா்வகோட்டையில் கடைகளுக்கு அபராதம்
By DIN | Published On : 14th May 2021 06:56 AM | Last Updated : 14th May 2021 06:56 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் சமூக இடைவெளியின்றி வியாபாரம் செய்த கடைக்காரா்களிடமிருந்து ரூ.2,200 அபராதம் வியாழக்கிழமை வசூலிக்கப்பட்டது.
முழு ஊரடங்கையொட்டி கந்தா்வகோட்டையில் வட்டாட்சியா் சி. புவியரசன், காவல் ஆய்வாளா் த. ஞானவேல், விஏஓ அரங்க. வீரபாண்டியன் ஆகியோா் பல்வேறு பகுதி கடைகளில் ஆய்வு செய்தபோது மருந்தகம், உணவகம், மளிகைக்கடை , காய்கறி கடை உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளியின்றி வியாபாரம் செய்த கடைக்காரா்களிமிடருந்து ரூ. 2200 அபராதம் வசூலித்தனா்.