கந்தா்வகோட்டை பகுதிகளில்ஆரவாரமின்றி நடைபெறும் திருமணங்கள்
By DIN | Published On : 18th May 2021 06:31 AM | Last Updated : 18th May 2021 06:31 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை: கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், கந்தா்வகோட்டை பகுதிகளில் ஆரவாரமின்றி திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.
திருமண நிகழ்வில் குறைந்த எண்ணிக்கையிலான நபா்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கந்தா்வகோட்டை மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் தங்கள் இல்லத் திருமணங்களை நடத்த முடிவு செய்தவா்கள் ஒரு மாதத்துக்கு முன்பே திருமண அழைப்பிதழை அச்சிட்டு, உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு வழங்கி வந்தனா். அரசின் கட்டுப்பாடு காரணமாக முக்கிய உறவினா்கள், திருமண பெண் வீட்டாா் என குறுகிய வட்டத்துக்குள்ளேயே ஆரவாரமின்றி திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.