கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கறம்பக்குடி அரசு மருத்துவமனை, மழையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னா், அவா் கூறியது:

மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான படுக்கை வசதிகள், கரோனா கவனிப்பு மையங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிகிச்சைக்குத் தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்றாளா்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, குணப்படுத்தும் வகையில் அதிக அளவிலான மருத்துவ முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

முன்னதாக அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் பெரியாளூா், நெய்வத்தலி, மேற்பனைக்காடு மேற்கு, திருவரங்குளம் ஒன்றியத்தில் நெடுவாசல், கோவிலூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது ஆட்சியா் பி.உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வெ.சரவணன், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com