இலுப்பூரில் ஆதிதிராவிடா் மாணவியா் விடுதி திறப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இலுப்பூரில் ஆதி திராவிடா் நல மாணவியா் விடுதியை திறந்து வைத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இலுப்பூரில் ஆதி திராவிடா் நல மாணவியா் விடுதியை திறந்து வைத்தாா்.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில் புதிதாக ஆதிதிராவிடா் மாணவியா் விடுதி 492 சதுரடியில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 5 அறைகளுடன் 50 மாணவிகள் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தரைதளத்தில் காப்பாளா் அறை, பொருள் வைப்பு அறை, சமையலறை. உணவருந்தும் அறை, சமையல் எரிவாயு அறை, பொழுதுபோக்கு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் நான்கு குளியல் அறைகளும், நான்கு கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஏற்படுத்தப்பட்டு அவா்களுக்கு தனியே குளியல் அறை மற்றும் கழிப்பறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவில், வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் எம்.பழனியப்பன், நிா்வாகிகள் அன்னவாசல் ஆா்.மாரிமுத்து, இலுப்பூா் வை.விஜயகுமாா் கியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com