சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

ஆடு திருடர்களால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் சிக்கினர்.
மணிகண்டன்.
மணிகண்டன்.

ஆடு திருடர்களால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இரு சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ். பூமிநாதன் (50), திருச்சி மாவட்டம் பூலாங்குடி காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் இருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் ஆடுகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். பூமிநாதன் மற்றும் காவலர் ஒருவர் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது தப்பியோடினர்.

இதையடுத்து சிறப்பு உதவி அய்வாளர் பூமிநாதன் அவர்களைத் துரத்தி வந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி பகுதியில் ரயில்வே தரைப்பாலத்தின் அருகே அவர்களை பூமிநாதன் பிடித்துள்ளார். அப்போது பூமிநாதனின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு மூவரும் தப்பியோடி உள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகளில் பூமிநாதனுக்கு அருகே இருந்த செல்போன்கள் பற்றிய விவரங்களை செல்போன் சிக்னல் வழி போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதில் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகேயுள்ள தோகூர் பகுதியைச் சேர்ந்த சிலரின் எண்களை தனிப்படையினர் நேரில் விசாரணை நடத்தினர். இதில், தோகூர் பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் (19) மற்றும் இரு சிறாரும் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் இருவரும் மணிகண்டனின் உறவினர்கள். புதுக்கோட்டையில் வசித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களிடமிருந்து சக்கர வாகனம் மற்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். திங்கள்கிழமை பகலில் குற்றவாளிகள் கீரனூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com