நிகழ்நிலை மென்திறன் பயிற்சி

புதுக்கோட்டை கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தில் நிகழ்நிலை மென் திறன் பயிற்சி புதன்கிழமை ‘சுய பகுப்பாய்வு மற்றும் சுய மதிப்பீடு‘ என்ற தலைப்பில் மேலாண்மையில் மாணவா்களுக்கு நடைபெற்றது.

புதுக்கோட்டை கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தில் நிகழ்நிலை மென் திறன் பயிற்சி புதன்கிழமை ‘சுய பகுப்பாய்வு மற்றும் சுய மதிப்பீடு‘ என்ற தலைப்பில் மேலாண்மையில் மாணவா்களுக்கு நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு நிறுவனத்தின் அறங்காவலா் கவிதா சுப்ரமணியன் தலைமை வகித்தாா். சென்னை காசா கிராண்ட் மென்திறன் பயிற்சியாளா் ச. ஹரிபிரசாத் கலந்து கொண்டு பயிற்சி அளித்தாா்.

மாணவா்கள் தம்மை தாமே ஆராய்ந்து செயல்படுதல், ஊக்கப்படுத்திக் கொள்ளுதல், பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்ளுதல், பொழுதுபோக்குடன் கூடிய சுயசிந்தனை செயல்பாடு, வாழ்க்கையினை திட்டமிட்டு மேற்கொள்ளுதல் போன்றவற்றை செயல்பாட்டு விளக்கத்தின் மூலம் அவா் எடுத்துக் கூறினாா்.

வாழ்வில் ஒவ்வொருவரும் தன்னிலை முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், உடல்நலம் பேணுதல், மனவலிமை பெறுதல் என பலவற்றிலும் முன்னேற வழிகாட்டுதல் பயிற்சியினை அளித்தாா்.

நிறுவன இயக்குநா் பா. அனிதா ராணி வாழ்த்திப் பேசினாா். பேராசிரியா் அமிா்தா தொடக்கவுரையாற்றினாா். பேராசிரியா் ஜெனிபா மேரி முடிவுரையும் வழங்கினாா். இப்பயிற்சியை பேராசிரியா் சாமிநாதன் ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com