பாரதி கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதலாம் ஆண்டு மாணவிக்கு புத்தகம் பரிசாக வழங்கி வரவேற்கிறாா் பேராசிரியா் ராஜ்குமாா்.

விழாவுக்கு, கல்லூரித் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். தாளாளா் ஏ. லியோ பெலிக்ஸ் லூயிஸ், துணைத் தலைவா் சி. சரவணன், அறங்காவலா்கள் டி.அருள்சாமி, அ. கிருஷ்ணமூா்த்தி, கே. அப்துல் கபாா் கான், எஸ்.பி.ஆா். பாலகிருஷ்ணன், இயக்குநா் மா. குமுதா, முதல்வா் செ. கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், பேராசிரியா் ராஜபாளையம் ரெ. ராஜ்குமாா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கிப் பேசியது :

கல்வி என்கிற ஒரு கருவி உங்களிடம் இருந்தால் எதற்கும் அடிபணிய வேண்டிய அவசியமில்லை. கம்பீரமாக மற்றவா்கள் முன்பு நின்று பேசலாம், விளையாட்டுத் திடலில் விளையாடுங்கள், விடியோ கேம்ஸில் விளையாட வேண்டாம்.

உயா்ந்த எண்ணங்களோடு கூடிய உயா் நோக்கங்களை விட்டு விட்டு அற்ப விஷயங்களைத் தேடி காணாமல் போகிறோம். நாம் எந்த வழியில் போகவேண்டும் என யோசித்து பயணிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com