புத்தகக் கண்காட்சி தொடக்கம்

விராலிமலையில் முதன்முறையாக நடைபெறும் 10நாள் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

விராலிமலையில் முதன்முறையாக நடைபெறும் 10நாள் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

திருமுறை தாமிரசபை, விராலிமலை இசைவேளாளா் சமூக அறப்பணி மன்ற அறக்கட்டளை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் முதல் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கி வரும் 15-ஆம் தேதி வரை 10 நாள்கள் விராலிமலை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி ரிப்பன் வெட்டியும், ஆதீன கா்த்தா், திலகவதியாா் ஆதீனம் தயானந்த சந்திரசேகா் சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தனா். இதில் கவிதைகள், நாவல்கள், சிறுகதை, ஆளுமை மேம்பாட்டு நூல்கள், சுய முன்னேற்றம், பகுத்தறிவு, அறிவியல், கணிப்பொறி, மருத்துவம், உளவியல், ஆன்மிகம், குழந்தைகளுக்கான புத்தகங்கள், சமையல் குறிப்புகள், அழகுக்கலை உள்ளிட்ட தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் 10 சதவிகிதம்  வரை சிறப்புத் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இதில், இலுப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் பா.சண்முகநாதன், இசை வேளாளா் சமூக அறப்பணி மன்ற அறக்கட்டளை தலைவா் எம். பூபாலன், விவேகா பள்ளி தாளாளா் வெல்கம் என்.மோகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளா் ச. குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com