முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
தோ்தல் தகராறில் காதை கடித்து துண்டாக்கிய இளைஞா் மீது வழக்கு
By DIN | Published On : 11th October 2021 10:24 PM | Last Updated : 11th October 2021 10:24 PM | அ+அ அ- |

ஆலங்குடி: ஆலங்குடி அருகே உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஏற்பட்ட மோதலில் ஞாயிற்றுக்கிழமை ஒருவரின் காதை கடித்துத் துண்டாக்கிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு ஊராட்சி சுந்தர குடியிருப்பைச் சோ்ந்தவா் விஜயசுந்தரம் (57). விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை ஆடுமேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு சென்ற உசிலங்கொல்லை பகுதியைச் சோ்ந்த குமரேசன் (40) உள்ளாட்சித் தோ்தலில் வாக்களித்தது தொடா்பாக விஜயசுந்தரத்திடம் தகராறு செய்தாராம். அப்போது, குமரேசன் விஜயசுந்தரத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைப்பாா்த்த விஜயசுந்தரத்தின் மகன் சதீஷ்குமாா் தடுக்க முயன்றும் முடியாததால் குமரேசனின் காதை சதீஷ்குமாா் கடித்துள்ளாா். இதனால், குமரேசனின் காது துண்டான நிலையில் அவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.