முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
பொற்பனைக்கோட்டையில் கிணறு அமைக்கும் பணி
By DIN | Published On : 11th October 2021 12:09 AM | Last Updated : 11th October 2021 12:09 AM | அ+அ அ- |

பொற்பனைக்கோட்டையில் கிணறு அமைக்கும் பணி
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் ரூ. 15.67 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட தேத்தான்பட்டி கிராமம், பொற்பனைக்கோட்டையில் நடந்த
நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆா். ராஜாங்கம், செல்வி ராமதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.