டெங்கு கொசு ஒழிப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

கந்தா்வகோட்டை அருகே உள்ள புனல் குளம் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியை எம்எல்ஏ மா.சின்னத்துரை சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

புனல்குளம் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுநகா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சந்தோஷ் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள் கொசு மருந்துகளை ஊராட்சியின் வீதிகள்தோறும் அடித்தனா்.

இப்பணியினை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னத்துரை ஆய்வு செய்தாா். அப்போது, ஊராட்சித் தலைவா் ரேணுகாதேவி உதயகுமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் கோ. முத்துக்குமாா், சண்முகசுந்தரம் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் நல்லமுத்து, திருநாவுக்கரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com