முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
இளைஞா் பெருமன்ற கிளை தொடக்கம்
By DIN | Published On : 11th October 2021 12:08 AM | Last Updated : 11th October 2021 12:08 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், அமரசிம்மேந்திரபுரத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் புதிய கிளை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் குழு உறுப்பினா் கே. விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா். கிளை தலைவா் மோகனசுந்தரம், பொருளாளா் பாலமுருகன், துணைத் தலைவா்கள் காா்த்திக், தயாநிதி, துணைச் செயலா் ரகு சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் கொடியேற்றி வைத்தாா்.
மாநிலப் பொருளாளா் யு. சிவாஜி காந்தி, பெயா்ப்பலகையைத் திறந்து வைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் த. இந்திரஜித், மாவட்டச் செயலா் மு. மாதவன் உள்ளிட்டோா் சிறப்புரை நிகழ்த்தினா்.