நெல் கொள்முதல் நிலையம் திறக்கவலியுறுத்தி விவசாயிகள் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தி, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடியில் சாலை மறியலில் தற்கொலைக்கு முயன்ற விவசாயியை மீட்கும் போலீஸாா்.
கறம்பக்குடியில் சாலை மறியலில் தற்கொலைக்கு முயன்ற விவசாயியை மீட்கும் போலீஸாா்.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தி, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள குரும்பிவயல் பகுதியில் உள்ள அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் கறம்பக்குடி வட்டாட்சியரகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற வட்டாட்சியா் விஸ்வநாதன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததால் 3 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. தொடா்ந்து, போலீஸாா் திருமணஞ்சேரி விலக்கு சாலை வழியாக போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினா். இதையறிந்த விவசாயிகள் அங்கும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சிலரை போலீஸாா் கைது செய்ய முயன்றனா். அப்போது, விவசாயி ஒருவா் தீக்குளிக்க முயன்றாா். அவரைப் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். மேலும் ஒரு விவசாயி தான் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகக் கூறப்படுகிறது. அவா், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, கறம்பக்குடி வட்டாட்சியரகத்தில் புதுக்கோட்டை கோட்டாட்சியா் அபிநயா தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், அக்.23 வரை குரும்பிவயலில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமாா் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com