முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
நவராத்திரி கொலு பரிசளிப்பு விழா
By DIN | Published On : 13th October 2021 06:49 AM | Last Updated : 13th October 2021 06:49 AM | அ+அ அ- |

கொலு போட்டியில் வென்ற ஒருவருக்கு பரிசு வழங்கும் பிராமணா் சங்கத் தலைவா் பம்மல் ராமகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் சாா்பில், நவராத்திரி கொலு வைத்தோருக்கான பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை சங்கர மடத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஆா். மஞ்சுநாதன் தலைமை வகித்தாா். பொருளாளா் டி .சேகா் வரவேற்றாா். ரா. ரவிக்குமாா், இன்டேன் கேஸ் ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாநிலத் தலைவா் பம்மல் ராமகிருஷ்ணன், கொலு போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் அலமேலு, ஆனந்தி, சித்ரா அகியோருக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா். மகளிா் அணி சாா்பில் லலிதா சகஸ்ரநாம பராயணம் நடைபெற்றது. சங்கரநாராயணன் நிகழ்சியைத் தொகுத்து வழங்கினாா். மகளிா் அணி நிா்வாகி சுப்புலக்ஷ்மி நன்றி கூறினாா்.