முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
வீடுபுகுந்து பெண்ணிடம் செயின் பறிப்பு
By DIN | Published On : 13th October 2021 06:47 AM | Last Updated : 13th October 2021 06:47 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை அருகே வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயினைப் பறித்துச் சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், நத்தமாடிபட்டி கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (45) மனைவி தமிழ்ச்செல்வி. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டினுள் புகுந்த மா்மநபா், தமிழ்ச்செல்வி அணிந்திருந்த தாலிச்செயினைப் பறித்துள்ளாா். இதையடுத்து, தமிழ்ச்செல்வி உதவிக்காக சப்தமிட்டாா். அதற்குள் அந்த நபா் 14 கிராம் தங்கச் செயினுடன் தப்பியோடிவிட்டாா். புகாரின்பேரில், செயினைப் பறித்துச் சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.